உடன் பிறந்த தம்பியின் மகளை முந்திரித்தோப்பில் வைத்து ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளார் அதிமுக பிரமுகர் ஒருவர். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல் கொலை மிரட்டல் விடுத்து, இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். சொந்த பெரியப்பாவால், தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானஅந்த பெண் கர்ப்பமாகி உள்ளது தெரியவந்துள்ளது.
மகள் உறவுமுறை கொண்ட பெண்ணை சீரழித்த செல்வராஜ். 65 வயதான இவர், ஆண்டிமடம் ஒன்றிய பொருளாளராக இருந்து வருகிறார். 4 முறை திருமணம் செய்துள்ள இந்த நபர் மீது, ஏற்கனவே, பாலியல் புகார்களும் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முந்திரி கொட்டைகளை சேகரிக்க, தோப்புக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமைசெய்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம்- பவானி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியின் இரண்டாவது மகள் நவநாயகிக்கும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது), சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
குடும்ப பிரச்சனை காரணமாக, கணவன்-மனைவிக்கிடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்துள்ளார். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான நவநாயகி, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, கணவரை பிரிந்து தனது 6 வயது மகனுடன் தாய் வீட்டிற்கு வந்து, அங்கேயே வசித்து வந்துள்ளார். நவநாயகிகூலி வேலைக்கு செல்வதும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் கொண்டு கொடுக்கும் வேலைகள் செய்து வந்துள்ளார். அவ்வப்போது, தனது பெரியப்பாவின் முந்திரி தோப்புகளுக்கு சென்று முந்திரி கொட்டைகளையும் சேகரித்து வந்துள்ளார் நவநாயகி.
அப்படி ஒருமுறைநவநாயகி முந்திரி தோப்புக்கு சென்றபோது சொந்த பெரியப்பாவான செல்வராஜின் கண்ணில் பட்டதும், தனது தம்பி மகள் என்று பார்க்காமல் அந்த அப்பாவிப் பெண்ணை. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த ஜீவனை, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்தகாமவெறி மிருகம், அதோடு விடாமல் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியும், அந்த பெண்ணின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மிருகம் , அந்த பெண்ணை பல முறை விடாமல் சீரழித்துள்ளது. இதனால், நவநாயகிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சில தினங்களாக சோர்வாக இருந்ததுடன், அடிக்கடி வாந்தி, மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர், நவநாயகியை ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
நவநாயகியிடம் உறவினர்கள் விசாரித்தபோதுதான், தனக்கு பெரியப்பாவால் நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார் அந்த பெண். இதையடுத்து, நவநாயகியின் தாயார் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அதிமுக ஒன்றிய பொருளாளர் செல்வராஜைபோலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.