
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள்4 பேர் உயிரிழந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ளது கல்வடங்கம் காவிரி ஆறு. இந்த ஆற்றில் எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர்கள் 10 பேர் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மணிகண்டன், பாண்டியராஜன், முத்துசாமி, மணிகண்டன் ஆகிய நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர்.
உடனடியாக எடப்பாடி தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்துவந்த மீட்புப் படையினர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியோடு நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீரில் மூழ்கிய நான்கு பேரையும்சடலமாகவேமீட்க முடிந்தது. இந்நிலையில் நான்கு மாணவர்களின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்குதலா 2 லட்சம் ரூபாய்நிவாரணம்அறிவித்துள்ளார்.
Follow Us