incident of Annamalai Nagar near Chidambaram Cuddalore dt

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் இரட்டை குளம் பகுதியில் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மகன் கங்கி நரசிம்மா (வயது 40) சிதம்பரம் அருகே உள்ள எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், கோகுல்ராஜ், சேரா நீதி, பள்ளிப்படை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கிருபானந்தம், சிதம்பரநாதன், பேட்டை ராகுல் ஆகியோர் மூட்டையில் கஞ்சாவை வைத்துக்கொண்டு விற்பனைக்காகப் பிரித்துச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்துக்கொண்டிருந்தனர் கொண்டிருந்தனர்.

Advertisment

இதனை அறிந்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அவர்களைப் பிடித்து மூட்டையில் இருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அதோடு அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் நவீன இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நரசிம்மா, ஆகாஷ், மகேஷ், ஆகிய 3 பேரும் ஏற்கனவே அண்ணாமலை நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 21. 500 கிலோ கிராம் கஞ்சாவைப் பிடித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment