Advertisment

திருமணம் செய்துவைக்க சொல்லி தகராறு... தந்தையை கொலை செய்த மகன் கைது!!

incident in andimadam

Advertisment

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ளது கொங்கு நாட்டார் குப்பம். இந்த ஊரைசேர்ந்தவர் 65 வயது சக்கரவர்த்தி,இவருக்கு 3 மகன்கள். இரு மகன்களுக்குஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார்.இவரது மூன்றாவது மகன் கலியமூர்த்தி வயது 35.இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளி.அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முழுவதும் மது குடித்தே செலவழித்து விடுவார். குடும்பத்திற்கு எதுவும் தருவதில்லை. வேலை செய்வதும் குடிப்பதுமாக இருப்பார். இதனால் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை.

மேலும் பெண் கேட்டு போகும் இடங்களில் கலியமூர்த்தி குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை தெரிந்துகொண்டு சிலர் பெண் கொடுக்க தயக்கம் காட்டி வந்தனர். இந்தநிலையில் தனது தந்தை சக்கரவர்த்தியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக நேற்று முன்தினம் போதையுடன் வந்த கலியமூர்த்தி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார்.கோபத்தின் உச்சிக்குச் சென்ற கலியமூர்த்தி அருகிலிருந்த மண்வெட்டி எடுத்து தந்தை சக்கரவர்த்தியை தாக்கினார். இதில் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். திருமணம் செய்து வைக்கவில்லை என்று தந்தையை கொலை செய்த மகனின் செயல்அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Father of incident Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe