செல்ஃபோன் பேசியபடி தவறி கிணற்றில் விழுந்த பெண்-போலீஸ் விசாரணை!

incident in ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்காவுக்க உட்பட்டது மிட்டாளம் ஊராட்சியில் உள்ள குட்டகந்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி. இவரின் 25 வயது மனைவி லக்ஷனா. இன்று இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நடந்து செல்லும்போது, செல்போனில் பேசியபடி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது விவசாய கிணற்றின் அருகே பேசிக்கொண்டே செல்லும்போது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் விழுந்தவர் தன்னை காப்பாற்றச்சொல்லி கத்தியதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கிணற்றில் விழுந்த லக்ஷனவை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்காமல் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுப்பற்றிய தகவல் அறிந்த உமராபாத் காவல்நிலைய காவல் அதிகாரிகள், விரைந்து சென்று, கிணற்றில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையில் கால் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்துக்கொள்ள குதித்தாரா? அல்லது யாராவது தள்ளிவிட்டார்களா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், திருமூர்த்தி - லஷ்னா தம்பதிக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. இதனால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ambur cell phone thirupathur
இதையும் படியுங்கள்
Subscribe