சேலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு முடித்திருத்தம் செய்ய மறுத்தது தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊனத்தூரில் பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு முடித்திருத்தம் செய்ய சலூன்கடைகாரர் ஒருவர் மறுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் அந்த சலூன்கடை உரிமையாளர் பழனிவேல் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு உரிமையாளர் மற்றும் கட்டிட உரிமையாளர் தலைமறைவான நிலையில் அந்த இருவரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.