Advertisment

காய்ச்சலால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு

incident for A 10-year-old boy with fever

காய்ச்சல் பாதிப்பால் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Advertisment

சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன்சக்தி சரவணன் என்பவருக்கு கடந்த 8 ஆம் தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி சரவணன் இன்று அதிகாலை 03.50 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai child Egmore FEVER
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe