Advertisment

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை; முதல்வர் பங்கேற்பு

Incentives for sanitation workers; Participation of Principal

Advertisment

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் பல இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்தது. படிப்படியாக நீர் அகற்றப்பட்ட நிலையில், சென்னை நகரை முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியில்தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகரத்திற்கு அழைத்துவரப்பட்டு மாநகரை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தூய்மை பணியாளருக்கு தலா நான்காயிரம் ரூபாய் என ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறந்த முறையில்தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னை ரிப்பன் மாளிகையின் வெளியே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

CycloneMichaung TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe