கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இரண்டாவது அலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியார்கள், சிடி ஸ்கேன் எடுப்பவர்கள், ஆய்வுக்கூட நிபுணர்கள், அவசர ஊர்தி பணியாளர்கள் ஆகியோருக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊக்கத்தொகையாகமருத்துவர்களுக்கு 30 ஆயிரமும், செவிலியர்களுக்கு 20 ஆயிரமும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.