இன்று நண்பகல்12.30 மணியளவில், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில், சென்னை முதல் நாகர்கோவில் வரை, மதுரை முதல் பெங்களூர் வரை, மீரட் முதல் லக்னோ வரை செல்லும் 3 வந்தே பாரத் ரயில்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர். டாக்டர். எல். முருகன், மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .பொன்.ராதாகிருஷ்ணன். முன்னாள் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.