திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்குப்பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், கழக முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், காணொளி மூலம் கலைஞர் சிலையைத்தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் ஆகியோர் இருந்தனர்.