புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா; மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பங்கேற்பு

 Inauguration of New Anganwadi Center Building; Modakurichi MLA participation

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி வட்டம்,ஆனந்தம் பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி (2021-22) மூலம் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில்மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு அங்கன்வாடி மையக் கட்டடத்தைத்திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில்மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா, ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் மெய்யழகன், வார்டு உறுப்பினர்கள் கே.எம். சிகமலை மற்றும் ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வி இளங்கோ, அஇஅதிமுக மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கதிர்வேல், முன்னாள் மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் தமயந்தி சிவானந்தம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் கணபதி, அஇஅதிமுக நிர்வாகிகள் ராசு, கைலாசம், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி, அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் கிருத்திகா சிவகுமார், அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Erode MLA
இதையும் படியுங்கள்
Subscribe