Advertisment

விவசாயிகளுக்கு நூல்கோல் செயல்முறை விளக்கப் பண்ணை துவக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறையின் கிராமபுற விரிவாக்கப் பணி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு உயர்நிலை பள்ளியில் நம்மாழ்வார் நினைவு நூல்கோல் செயல்முறை விளக்க பண்ணை துவக்க விழா நடைபெற்றது.

Advertisment

பல்கலைக்கழக வேளாண்முதல்வர் முனைவர்மணிவண்ணன் தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகள் பின்பற்ற வேண்டிய புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றியும், வீடுகளில் காய்கறி தோட்டங்கள் அமைத்து, அதிகளவில் கீரைகள் உட்கொண்டு தற்போதைய குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காண வேண்டும் என்றார்.

Inauguration of Farming Process for Farmers

பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் மற்றும் கிராமப்புற விரிவாக்கப் பணி பொறுப்பாளர் முனைவர் ராஜ்பிரவின் வரவேற்று பேசினார்.சி.முட்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிவாசகம் பேசுகையில், இயற்கை வேளாண் தொழில் நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் தங்கள் பள்ளியில் இயற்கை வேளாண்மை வாயிலாக சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களை பற்றி விளக்கி கூறினார்.

Advertisment

சி.முட்லூர் பாரத வங்கியின் மேலாளர் சசிரஞ்சன் குமார் பேசுகையில், விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறவேண்டும் என்றும் இதற்கு தேவைப்படும் கடன் உதவி சேவைகளை தங்கள் வங்கி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இதில் கிராமப்புற விரிவாக்கப் பணியின் சார்பில் அமைக்கப்பட்ட நம்மாழ்வார் நினைவு நூல்கோல் செயல்முறை விளக்கப் பண்ணை வேளாண்முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தார். நூல்கோல் சாகுபடியை தங்கள் வீட்டு தோட்டங்களில் துவங்க நூல்கோல் விதைகளைசி.முட்லூர் அரசு பள்ளியில் படிக்கும் வேளாண் பிரிவு மாணவர்களுக்குபள்ளி வேளாண் ஆசிரியை சாந்தி, சி.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி பஞ்சநாதன், மேல் அனுபவம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி மருதப்பன் ஆகியோர் வழங்கினார்.

50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.முட்லூர் அரசு பள்ளி வேளாண் பாடப்பிரிவு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னோடி விவசாயி கணேசன் நன்றி கூறினார்.

agriculture Farmers village
இதையும் படியுங்கள்
Subscribe