டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலை திறப்பு 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்துவைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் 7 அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டது. அதனை அவரது பிறந்தநாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்
Subscribe