Skip to main content

உயிரை பறித்த தகாத உறவு... குடும்பமே சேர்ந்து சிறுவனை வெட்டிக்கொன்ற கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டதில் குடும்பமே தகாத உறவில் ஈடுபட்டு அதன் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன் பராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு சரத்குமார் என்ற மூத்த மகனும், சிவகுமார் எனும் இளைய மகனும், ஒரு சகோதரி என மூன்று பேர் இருந்துள்ளனர். கடந்த 26ஆம் தேதி இளைய மகனான சிவகுமார் கழுத்து அறுபட்ட நிலையில் காப்புக்கட்டு பாறை எனும் பகுதியில் சடலமாக கிடந்தார். அப்பாவான கேசவன் வெளிநாட்டில் தங்கி வேலைபார்த்து வருகிறார் இந்நிலையில் தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார், அக்காவுடன் வசித்து வந்த அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு பாறைகளுக்கு நடுவே கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

Inappropriate relationship that took the life! incident in vilupuram

 

மேலும் இது திட்டமிட்ட கொலை என போலீசார் விசாரணையில் தெரியவர, யார் இந்த கொலை செய்திருப்பது என போலீசார் தோண்டித் துருவி விசாரித்து வந்தனர். சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்த பொழுது மோப்பநாயானது சம்பந்தப்பட்ட சிவகுமாரின் வீட்டிற்கே சென்று படுத்துக் கொண்டது. ஒருவேளை சிவகுமார் வீட்டிலிருந்து காப்புகாட்டிற்கு வந்திருக்கலாம் அதன் காரணமாக மோப்பநாய் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கண்மூடித்தனமான முறையற்ற தகாத உறவினால் அந்தச் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuram

 

சிறுவனின் தந்தை வெளிநாட்டிற்கு சென்று விட்டதால் தாய் பராசக்தி நடத்தை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை சிலமுறை மூத்த மகனான சரத்குமார் நேரில் பார்த்துவிட சரத்குமாருக்கும் அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இவர்களின் தகாத உறவை பார்த்துவிட்டதால் உடன்பிறந்த தங்கையையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் சரத்குமார். இதைப் பற்றி வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன் என அந்தப் பெண்ணுக்கும் மிரட்டல் விட்டுள்ளான் சரத்குமார். சரத்குமாரின் இந்த மிரட்டலுக்கு பயந்த அந்தப் பெண்ணும் இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuram

 

சூழ்நிலை இப்படி இருக்கையில் ஒருநாள் சிவகுமார் உடன்பிறந்த தங்கையுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை இளைய சகோதரனான சிவகுமார் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதை எங்கே ஊராரிடம் சொல்லிவிடுவானோ என்று அஞ்சிய சரத்குமார் அவனை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தான். சம்பவத்தன்று தனது சித்தியிடம் நம்முடைய தகாத உறவு விவகாரம் தம்பி சிவகுமாருக்கு தெரிந்துவிட்டது. அவனை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அவரையும் துணைக்கு அழைத்துள்ளான் சரத்குமார். அதேபோல் அவனது தங்கையையும் துணைக்கு அழைத்துள்ளான்.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuramInappropriate relationship that took the life! incident in vilupuram

 

மூன்று பேரும் சேர்ந்து சிவகுமாரிடம் உடும்பு பிடிக்கலாம் என ஏமாற்றி கொலை செய்யும் நோக்கில் காப்புகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு உடும்பு பாறைக்கு நடுவே ஓடுவதாகவும் அதனை பிடிப்பதற்காக பாறையிடுக்கில் உற்று நோக்கி பார் என சரத்குமார் தம்பி சிவக்குமாரிடம் சொல்ல, சிவகுமாரும் பாறை இடுக்கு நடுவே பார்த்துக் கொண்டிருந்த பொழுது சரத்குமார் வரும்போதே மறைத்து வைத்து எடுத்து வந்த கரும்பு வெட்டும் அரிவாளால் வெட்ட  சிவகுமாரின் தலையை பிடித்து அழுத்தினான். அப்போது உசாராகி தப்பித்து ஓட முயன்ற சிவகுமாரை அவனது சித்தியும், சகோதரியும் சேர்ந்து கால்களை பிடித்துக்கொள்ள தன் உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார்.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuram

 

கொலை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஊருக்குள் வந்து தம்பியை தேடுவதுபோல குடும்பமே பாவ்லா காட்டியுள்ளது. ஊருக்கு வெளியே நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த காட்டுப்பகுதியில் சென்று தம்பியின் சடலத்தை தானே கண்டுபிடித்ததாகவும் நாடகம் ஆடினார்கள். இதனால்தான் அவன் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே வந்தது.

 

Inappropriate relationship that took the life! incident in vilupuramInappropriate relationship that took the life! incident in vilupuram

 

இந்த வழக்கில் பராசக்தி, சரத்குமார் மற்றும் அவர்களுக்கு உதவிய அந்த பெண் ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தகாத உறவு காரணமாக உடன்பிறந்த சகோதரனை ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...