Advertisment

மதுரையில் மேம்படுத்தப்பட்ட வலி நிவாரண மையம் திறப்பு! 

Advertisment

மதுரை விளாச்சேரியில் உள்ள நேத்ராவதி வலி நிவாரண மையத்தில் 22 படுக்கை வசதி கொண்ட புதிய வலி நிவாரண வளாகம் திறக்கப்பட்டது. SHAKTHI CORDS PRIVATE LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஷியாம் பிரகாஷ் குப்தா மற்றும் வாசுதேவ் குப்தா ஆகியோரின் முயற்சியில் உருவான வளாகத்தை கருமுத்து டி.கண்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், இராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., ஹரி தியாகராஜன், அரவிந்த் கண் மருத்துவமனையின் சி.எம்.ஓ. டாக்டர் கிம், லிஜி ஜியார்ஜ், பிரதிபா சிங்கள், சுரேஷ் அகர்வால், டாக்டர்.வாசுதேவன், சித்ரா துளசிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், டாக்டர் எஸ். சபரி மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், இந்த வலி நிவாரண மையம் உருவான விதம் பற்றி டாக்டர். ஆர். பாலகுருசாமியும், எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் ஆர். அமுதநிலவன் மற்றும் டாக்டர் பி. வெங்கடேஷும் பேசினார்கள். இந்த விழாவில் ஜனார்த்தனன் மற்றும் ஜலஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe