Advertisment

மூத்த வயதுப் பெண்ணுடன் முறையற்ற தொடர்பு... கயிற்றால் கட்டிவைத்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சி!

 Improper contact with an older woman ... Video footage of her being tied up with a rope and shocked!

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை கிராமமான கூக்கல் என்ற கிராமத்தில் கடந்த 5 வருடத்திற்கு முன்பு உசிலம்பட்டியை சேர்ந்த தன்ராஜ் (வயது 32) என்ற இளைஞர் நிலப்பரப்பு ஒன்றை விலைகொடுத்து வாங்கி அதில் தங்கும் விடுதி கட்டி அதனை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த தங்கும் விடுதிக்கு பாலம்மாள் என்ற 50 வயது பெண் வேலைக்கு வந்துள்ளார். கணவனை இழந்த பாலம்மாளுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இளைஞன் தன்ராஜ்க்கும் மூத்த வயதுடைய பாலம்மாளுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று வருடமாக இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும்கூறப்படுகிறது.

police

முறையற்ற தொடர்பை கைவிடுமாறு பெண்ணின்உறவினர்கள் இளைஞன் தன்ராஜை எச்சரித்து வந்தனர். இதுதொடர்பாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கிராமத்தில் ஊர் திருவிழா நடைபெற்ற நிலையில் கூக்கல் வயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பாலம்மாளின் தம்பி பூவேந்திரன் மதுபோதையில் நண்பர்களுடன்சேர்ந்துகொண்டு தன்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கை கால்களை கயிற்றால் கட்டி கல்லால் தலை மற்றும் வயிற்றில் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்துகொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police kodaikanal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe