Advertisment

இன்ஸ்டாவில் முறையற்ற தொடர்பு... ஒரு வயது குழந்தை மது ஊற்றி கொலை... கொடூர தாய் கைது!

Improper contact on Instagram... mother arrested

நீலகிரி மாவட்டம் உதகையில் முறையற்ற உறவுக்குத் தடையாக இருந்த தனது குழந்தையைப் பெற்ற தாயே மது ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டம்உதகை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக்-கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கார்த்திக் கீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீதா அவரது ஒரு வயது மகனுடன் தனியாக வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி கீதாவின் பராமரிப்பிலிருந்த அவரது ஒரு வயது மகன் திடீரென உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக உதகை பி.1 காவல் துறையினர் மர்ம மரணம் எனவழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர். இந்நிலையில் மருத்துவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அளவுக்கு அதிகமாக மதுவை ஊட்டியதால் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து குழந்தையின் தாய் கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைக்கு மது ஊற்றி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். கார்த்திகை பிரிந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய நபர்களுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த கீதா அதற்கு தடையாக இருந்த குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டு இவ்வாறு செய்ததாக விசாரணையில் கூற, கீதாவை கைது செய்த காவல்துறையினர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

police baby incident nilgiris
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe