Improper communication by husband;  his wife was beaten

முறையற்ற தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ளது புல்லூர் கிராமம். அங்கு வசித்து வரும் ரமணி என்பவர் விருத்தாசலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரமணி கோவையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமணி தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பாண்டூரை சேர்ந்த அசோக் என்பவருடன் ரமணிக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டது.

Advertisment

ஆட்டோ ஓட்டி வந்த அசோக்கை ரமணி திருமணம் செய்து கொண்டார். ரமணி அசோக்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக்கிற்கு பல பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருப்பது ரமணிக்கு பின்னாளில் தெரியவந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமணியின் தாயார் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் சந்தேகமடைந்த ரமணியின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது வீடு பூட்டப்பட்டிருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்த ரமணியின் தாயார், வீட்டின் கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த பொழுது உள்ளே கட்டிலில் ரத்த வெள்ளத்தில் ரமணி இறந்து கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் இருந்த 25 சவரன் நகை மற்றும் பத்திரங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அசோக் ரமணியை அடித்துக் கொன்றது தெரியவந்தது. முறையற்ற தொடர்பு காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட பொழுது அசோக் ரமணியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Advertisment

கொலை செய்துவிட்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தன்னுடைய தாய் வீட்டில் விட்டுவிட்டு அசோக் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அசோக்கை போலீஸ் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.