சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுரையீரல் தொற்று காரணமாக சசிகலா கணவர் நடராஜன் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என சென்னை குளோபல் மருத்துவமனை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது.
இதனிடையே, நடராஜன் உடல் நாடித்துடிப்பில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 82ல் இருந்த நாடித்துடிப்பானது, தற்போது 90ல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநிலை இன்னும் 24 மணி நேரத்திற்கு நீடித்தால் கவலைக்கிடமான நிலையிலிருந்து நடராஜன் முன்னேற்றம் அடைவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை பார்க்க பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் திங்கள்கிழமை பரோல் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கணவரை பார்க்க ஏற்கனவே அக்டோபரில் சசிகலா பரோலில் வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் பரோல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)