Advertisment

ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

Imprisonment of Rameswaram fishermen

Advertisment

எல்லைத் தாண்டி மீன் பிடித்தாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இவர்களில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே இரு படகுகளில் 16 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளுடன் 16 மீனவர்களையும்இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மேலும்இவர்களை இலங்கை முகாமிற்கு அழைத்துச் செல்ல உள்ளனர். அதன் பின்னர் நாளை (15.10.2023) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அதனைத்தொடர்ந்து மீனவர்களைச்சிறையில் அடைக்க உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

fisherman Rameshwaram
இதையும் படியுங்கள்
Subscribe