Advertisment

சாராய வழக்கில் சிறை... உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!

 Imprisonment in alcohol case ... Success in local elections!

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 12/10/2021 அன்றுகாலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

இந்தநிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஒருவர் சிறையிலிருந்தே வெற்றிபெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள வலையாம்பட்டு ஊராட்சியில் 9வது வார்டு தேர்தலில் கிருஷ்ணன் என்பவர்போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். ஆனால் அவர், அக். 4ஆம் தேதி சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சீப்பு சின்னத்தில் போட்டியிட்டஅவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

thirupathur local body election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe