ADVERTISEMENT

தங்கத்தமிழ்செல்வனுக்கு திமுகவில் முக்கிய பதவி!

11:57 AM Aug 30, 2019 | kalaimohan

அண்மையில் திமுகவில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் அமமுகவில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மிக முக்கிய பொறுப்பான கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியுள்ளது திமுக.

அதேபோல் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த விபி.கலைராஜன் இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில் மூன்றாவது ஆளாக தங்கத்தமிழ்செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT