Skip to main content

சீர்மரபினர்களுக்கு முக்கிய அறிவிப்பு; தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Important order issued by the Chief Minister of Tamil Nadu for denotified communities

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு, Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு 6T60T வகைப்படுத்தப்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 29.7.2008இல் அரசாணை (நிலை) எண்.85-இல் தமிழ்நாடு சட்டம் 45/1994இன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர், அரசாணை (நிலை).26. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 8.3.2019இல் வெளியிடப்பட்ட ஆணையில், மாநில அரசின் 20 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் எனவும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கு இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றைப் பெறுவதில் நடைமுறையில் சிரமம் உள்ளதாகவும் அதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தெளிவுரைகள் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தெளிவுரையின்படி இனி வருவாய் அலுவலர்கள், வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்