பள்ளி படிப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் எங்களுக்கும் லேப்பாப் வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஈரோட்டை பரபரப்பாக்குகிறார்கள்.

Advertisment

தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதன் படி பிளஸ் 2 மாணவர்களுடன் பிளஸ் 1 மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது.

protest

இந்நிலையில் கடந்த 2017-18 ஆண்டு படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கூறி மாணவ மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இந்த லேப்டாப் விஷயம் வீரியமாக மாணவர்கள் போராட்டமாக வெடித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலவச லேப்டாப் கொடுக்க வந்த ஈரோடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு மற்றும் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை முற்றுகையிட்டு போராடினார்கள் இதில் மாணவ, மாணவியர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த அதன் பிறகு பீதியான எம்.எல்.ஏ.க்கள் எந்த பள்ளிக்கும் லேப்டாப் கொடுக்க செல்லவில்லை. ஆனால் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இலவச லேப்-டாப்கள் வழங்க கோரி 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டு வந்தனர்.

Advertisment

இதனால் நூற்றுக்கணக்கான போலீசார குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்கள் மனு கொடுக்க ஐந்து பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் அனுமதித்தனர் அந்த ஐந்து மாணவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் சென்று மனு கொடுத்தனர். அப்போது எங்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் உங்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் இலவச லேப்-டாப்கள் வழங்கப்பட்டு விடும் என்று கூறி அதற்கான அரசானை நகலை மாணவரிடம் காண்பித்தனர். இதனை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்திலிந்து வெளியேற தொடங்கினார்கள்.

protest

மனு கொடுக்க வந்த மாணவர்கள் கூறும்போது,

"நாங்கள் கடந்த 2017-18 ஆண்டில் பிளஸ்2 முடித்தோம். எங்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப்கள்இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் எங்களுக்கு அடுத்த வருடம் படித்த மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கிவிட்டனர் இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை. நாங்கள் தற்போது கணினி பாடம் சம்பந்தமாக படித்து வருகிறோம் லேப்டாப் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் லேப்டாப் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அரசு எங்களை வஞ்சிக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் மாவட்டத்தில் எல்லோருக்கும் கொடுத்து விட்டனர் எங்களுக்கு மட்டும் இன்னும் இரண்டு மாதம் பொறுங்க என தள்ளி போடுகிறார்கள். முதல்வர் எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாவட்டத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்" என்றனர்.