'An important announcement is made' - Chief Minister's surprise

'நாளை (23/01/2025) முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது' என நேற்று (22/01/2025) எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், 'நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்!' என குறிப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில், 'இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக' எனக்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment