ADVERTISEMENT

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம்.. - மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு கோரிக்கை

03:44 PM Mar 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இருந்து மாநில பட்ஜெட்டில் வேளாண்மைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த முறை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டிலும், வேளாண்மை பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், இயற்கை வேளாண்மைத் துறை சார்பாக பல கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளார். அதில் அவர், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க படித்த வேளாண் பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மைக்கு தேவையான பஞ்ச காவ்யா அமிர்த கரைசல் உள்ளிட்ட இடுபொருட்களை கிராம அளவில் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

அப்படி பயன்படுத்தும் போது, இயற்கை வேளாண்மையை எளிதில் மீட்டெடுக்க முடியும். எனவே இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு பட்ஜெட்டை இயற்கை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாற்றிடவும், இயற்கை வேளாண் பொருட்களை அரசு அலுவலகங்கள் தலைமைச் செயலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களிலும் இயற்கை உணவு மூலமாக தயாரிக்கப்பட்ட கடைகளை மட்டுமே அனுமதிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்.

இயற்கையில் விளைந்த வெல்லம், சாமை, தினை கம்பு கேழ்வரகு உள்ளிட்ட பொருட்களை ரேசன் கடைகளில் இயற்கை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT