Impersonation in the exam... BJP district president arrested!

பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருவிக அரசு கலைக் கல்லூரியில் நேற்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றது. இதில் பாஜகவுடைய திருவாரூர் மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய பாஸ்கர் என்பவருடைய பெயரில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' இளங்கலை பட்டத்திற்காக ஆள்மாறாட்டம் செய்து ஒருவர் தேர்வு எழுதி இருக்கிறார். பாஸ்கரின் ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு அதே திருவாரூரைச் சேர்ந்த திவாகர் மாதவன் என்பவர் தேர்வு எழுதியது தேர்வு அறை கண்காணிப்பாளரின் சோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்குதகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திவாகர் மாதவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த ஆள்மாறாட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisment

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் பாஜக கல்வி பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மூலமாகவே இந்த ஆள்மாறாட்ட தேர்வு எழுத ஒப்புக் கொண்டதாக திவாகர் மாதவன் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர்.