Skip to main content

பத்திரப் பதிவில் ஆள்மாறாட்டம்! 

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

Impersonation in the bond register!

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர், சொந்தமாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 1996ஆம் ஆண்டு 3.75சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி மீதமுள்ள 654 சதுர அடி நிலத்தை காலியாக விட்டுள்ளார்.


அப்படி காலியாக உள்ள 654 சதுர அடி நிலம் கடந்த 2005ஆம் ஆண்டு உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேறு ஒருவர் பெயரில் பத்திரம் செய்யப்பட்டிருப்பது அர்ஜுனனுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, திருச்சி நீதிமன்ற லோக் அதாலத்தில் இதுகுறித்து விசாரிக்க அவர் மனு அளித்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த இடத்தை பத்திரப் பதிவு செய்த அன்பழகன் என்பவரை அழைத்து விசாரணை நடத்தியதில், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. 


அதனால், அந்த வழக்கு 2018ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட காவல்துறைக்கு மாற்றப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அந்த வழக்கை விசாரணை செய்தது. இதில், சங்கிலி முத்து என்பவரை ஆள்மாறாட்டம் செய்து அர்ஜுனன் என்ற பெயரில் அன்பழகன் பத்திரப்பதிவு செய்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருச்சி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பழகனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதில் முழுமையான விசாரணைகள் நடந்து முடிந்து அன்பழகன் குற்றம் செய்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்