கனமழை பாதிப்பு; சீர்காழியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Impact of heavy rain; Holidays for schools in seerkazhi

அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகஅடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 19ம் தேதி வரை மிதமான மழையும் 20ம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், விளை நிலங்கள் போன்ற அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து அங்கு சென்று மீட்புப் பணிகளைத்தீவிரப்படுத்தியும் நிவாரண உதவிகளை வழங்கிய வண்னம் உள்ளனர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை (17/12/2022) விடுமுறை விடப்பட்டுள்ளது.

rain seerkazhi
இதையும் படியுங்கள்
Subscribe