Advertisment

கடலூர் மாவட்ட நகராட்சி பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரை! 

 Immunization tablet for municipal employees of Cuddalore district!

கரோனாவைரஸ் பரவலைத்தடுப்பதற்காக மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவை ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் மனிதநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்- 30 என்ற மாத்திரைகள் கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சார்பாகச் சிதம்பரம் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கச் செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமையில் மருந்தாளுநர் நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷாவிடம் ஹோமியோபதி மருத்துவர் பரணிதரன் 52 மாத்திரைகள் அடங்கிய 500 பாட்டில்களை வழங்கினார்.

Advertisment

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் ஆல்பம்- 30 என்ற மாத்திரைகளை 10 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை வெறும் வயிற்றில் 6 மாத்திரைகளையும், 10 வயதுக்குள்ளான சிறுவர்கள் காலை வெறும் வயிற்றில் 4 மாத்திரைகள் வீதம் சுவைத்துச் சாப்பிட வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தினார்.

Advertisment

நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் பால்டேவிட், துணைபொறியாளர் செந்தில்குமார்,சமூக ஆர்வலர்கள் ரமேஷ், கலியமூர்த்தி ஆகியோர்கலந்துகொண்டனர்.

corona virus tablet Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe