
சேலத்தில், புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக எஸ்.எஸ்.ஐ. ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம், சூரமங்கலம் காவல்நிலைய குற்றப்பிரிவில் தாமரைச்செல்வன் என்பவர் எஸ்.எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர், புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண், காவல்துறை உயர் அலுவலரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி நேரடி விசாரணை நடத்தினார்.
புகாரில் உண்மை இருந்ததை அடுத்து, எஸ்.எஸ்.ஐ. தாமரைச்செல்வனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் பாயும் எனத் தெரிகிறது.