veeramani

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை: ’’காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டுள்ள நிலையில், முழுப்பூசணிக்காயை கைச்சோற்றில் மறைப்பது போல, உச்சநீதிமன்றம் அவ்வாறு கூறவில்லை என்று கருநாடக மாநில அரசு கூறுவதும், அதனை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் அதற்கு ஒத்து ஊதுவதும் கண்டிக்கத்தக்கது.

தமிழக அமைச்சரவை அளவில் இதுகுறித்து ஆலோசனை செய்வது ஒருபுறம் இருந்தாலும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நீதிமன்ற தீர்ப்பும், நியாயமும் நம் பக்கம் உள்ள நிலையில், பாதிக்கப்படுபவர்களாக நாம் இருப்பது வேதனைக்குரியதாகும். இதில் காலதாமதம் செய்யாமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு முதல் அமைச்சரை வலியுறுத்துகிறோம்.’’