'பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்...'-தமிழக முதல்வர் உத்தரவு!

mk

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாகத்தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையைப் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4b3ef659-0fc1-4a92-901c-ea146a168bf5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_182.jpg" />

இக்கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டுள்ளநீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நாமக்கல்மாவட்டமக்களுக்குத்தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்என ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் 10 நிவாரண முகாம்களில் 337 பேர் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொருள் தரப்பட்டு வருகின்றன. நெல்லை திருக்குருங்குடி மலையில் கோயிலுக்குச் சென்ற 500 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் தொற்று வியாதிகள், டெங்குகாய்ச்சல் போன்றவை பரவாமல் இருக்கத்தகுந்த நடவடிக்கைகள்எடுக்கவேண்டும்.அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளைநேரடி கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளைப்பாதுகாப்பாக வைக்க துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரஉதவிக்குச்சென்னை அவசர கட்டுப்பாட்டுமையத்தின்1070 என்ற எண்ணிற்குமக்கள் அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tamilnadu TNGovernment weather
இதையும் படியுங்கள்
Subscribe