/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/103_17.jpg)
ரூ.5 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக பத்திரப்பதிவு செய்துகொள்ளும் தட்கல் நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு நடைமுறையை விரைந்து மேற்கொள்வதற்கான தட்கல் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த நடைமுறை 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றி அதிகபட்சமாக தினசரி 10 பத்திரப்பதிவுகள் மட்டும் செய்யப்படும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, எஞ்சிய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us