ADVERTISEMENT

"போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே போனஸ்....."- ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்! 

09:34 AM Oct 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் இணைச் செயலாளர் சுதா இன்று (09/10/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு.போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போனஸ் தொடர்பாக, இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இந்த ஆண்டு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சுமார் 1,25,000 ம் தொழிலாளர்களும் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லை. மேலும் தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே போனஸ் வழங்கினால், அவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

போக்குவரத்து என்பது பொதுமக்கள் சேவை என்பதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் மழை, வெயில் மற்றும் பனி காலங்களிலும் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கி வருகிறார்கள். மேலும் மகளிருக்கான பேருந்து பயண இலவச பயணதிட்டத்தின் மூலம் தமிழக பெண்கள் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் போன்றோர்களுக்கு தீபாவளி போனஸ் தொழிற்தகராறு சட்டம் 1947 படியும், போனஸ் சட்டம் 1965 படி போனஸ் 8.33 விழுக்காடு கருணைத் தொகை 11.67 விழுக்காடு என மொத்தம் 20 சதவீதம் குறையாமல் போனஸ் வழங்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டு போனஸ் 10% மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இது சம்மந்தமாக தொழிற்தாவா சட்டப்படி 20% சதவிதற்கு குறைவாக போனஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்து பிரிவு சங்கம் SVS தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் ஆணையத்தில் தொழிற்தாவா தொடுக்கப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகவே இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் 20% சதவிதத்திற்கு குறைமால் வழங்க வேண்டும்" என்று தமிழக அரசைக் கேட்டு கொள்கிறோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT