Skip to main content

அமைச்சரின் உடனடி நடவடிக்கை: மலேசியாவில் இறந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

Immediate action by the Minister; Body of deceased handed over to family

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது மூலசமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழச்சமுத்து. இவருடைய மகன் தமிழரசன் 57 வயது. இவர் மலேசியாவில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தமிழரசன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மூலம் மத்திய அரசுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனர்.

 

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி செல்வி, மகன் காமேஷ், மகள் கீர்த்திகா, அவரது உறவினர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ மணிகண்ணனை நேரில் சென்று சந்தித்து முறையிட்டனர். எம்.எல்.ஏ மணிகண்ணன் உடனடியாக தமிழக சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செஞ்சி மஸ்தான் அவர்களிடம் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். உடனே அமைச்சர் மஸ்தான் தமிழரசனின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து மலேசியாவில் இருந்து தமிழரசன் உடல் நேற்று முன்தினம் (25.05.2021) விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மூலசமுத்திரம் கிராமத்தில் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

அவரது உடலுக்கு அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ மணிகண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன், ராஜவேல், வசந்தவேல் உள்ளிட்ட திமுக கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது தமிழரசன் மனைவியிடம் 25,000 ரூபாய் உதவித்தொகையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழரசனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். நேரில் அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோம். தமிழரசன் அவர் வேலை செய்த மலேசியாவில் உள்ள பேக்கரியில் இருந்து அனைத்து உதவிகளையும் உடனடியாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார். மலேசியாவில் இறந்தவரின் உடலை விரைவில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ மணிகண்ணன், தமிழக அரசுக்கும் மூலசமுத்திரம் கிராமத்து மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்; ஆட்சியர் அதிரடி !

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட  வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரூ.11 லட்சம் மதிப்பிலான பணத்தால் சுவாமிக்கு அலங்காரம்; ஆச்சர்யமடைந்த பக்தர்கள்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Swami was decorated with money worth Rs.11 lakh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவிலில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பதினோரு லட்சம் மதிப்பிலான பணத்தாலும் நகைகளாலும் அம்மன் சிலை முழுவதும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றியும் வாழை இலையில் அரிசி தேங்காய் மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து தீபம் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சிறப்பு விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்.

10 நாட்களுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்றும், ஜாதக ரீதியான தோஷங்கள் தொழில் பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் கண் திருஷ்டி குழந்தை இல்லாத தம்பிகளுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் கடன் பிரச்சினை தீரும் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தப் பூஜையில் மந்திரங்கள் முழங்க அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.