Skip to main content

எதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த்தி!!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்த நிலையில், அதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த இளைஞருக்கு தமது அடுத்த படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார்.

 

iman gives chance to a blind man

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. தனது இனிமையான குரலால் விஸ்வாசம் திரைப்பட பாடலான 'கண்ணானே கண்னே' பாடலை பாடிய வீடியோவை அக்கிராமத்தை சேர்ந்த அஜித் மதன் எனும் இளைஞர் சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அந்த பதிவுதான் தற்போது இந்த விளைவை ஏற்படுத்தியுள்ளது என்றார் திருமூர்த்தி,பிறவியிலேயே கண்பார்வை அற்றவராக இருந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. பிறகு தொலைகாட்சியை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அதில் இசையை கேட்பதே தன்னுடைய பொழுதுபோக்காவும் இருந்துள்ளது. அதே போல தான் கேட்கும் பாடலை முழுமையாக பாடிப்பார்த்து பயிற்சியும் செய்துவந்துள்ளார் திருமூர்த்தி. இது காலப்போக்கில் அக்கிராமத்தின் இளைஞர்களிடம் பாடிகாட்டி வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் தட்டு, குடங்களில் இசை வாசித்து தானகாவே பாடலையும் பாடிவந்துள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி இளைர்கள் ஒரு தப்பு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். நொச்சிப்பட்டி கிராமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதில் கலந்துகொண்டு திரைப்பாடலை பாடி அசத்திவந்துள்ளார். அந்த கிராமத்ததில் திறமையை வெளிபடுத்துவது யாராக இருந்தாலும் அவர்களை ஊக்கபடுத்துவதே அக்ககிராமத்தின் பெருமையாக சொல்லாம்.

இந்த நிலையில் திருமூர்த்தியின் தாயார் சர்க்கரை நோயால் காலமான பிறகு தன் தந்தையுடனே வாழ்ந்து வந்தார். அவரின் பிரிவை மறக்கமுடியாத திருமூர்த்திக்கு அவருடைய பெரியப்பாவின் மகனான முரளி மனோகர் தன் தம்பி வாசிப்பதற்காக ஒரு கீபோர்ட் வாங்கித்தந்துள்ளார். அதை வைத்து தானே இசையமைத்து, சினிமா பாடலை தனியாக வரி எழுதி புதிதாகவும் பாட முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கோயம்புத்தூர் சென்று இசை பயிற்சி பெற்று வந்துள்ளார். அதுவும் நீண்டகாலம் பயணிக்க முடியாமல் தன் வறுமையின் காரணத்தால் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்படி ஊரில் அவர் பாடிய அந்த பாடலைத்தான் அஜித் மதன் என்பவர் வீடியோவாக எடுத்து சமூக வளைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவே தற்போது அவரது எதிர்காலத்தை மாற்றியுள்ளது.

இதன் தொடர்பாக நக்கீரனுக்கு பேசிய திருமூர்த்தி, முதலில் நான் இமான் சார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் நீண்ட நாள் கனவு இது, இன்று நினைவாகியுள்ளது. எங்கு நமக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று என்னை நானே கேள்விக்கேட்டுக் கொண்டதுண்டு, அது கனவாகவே போய்விடுமோ!
என்று நினைத்தும் உண்டு, இன்று சந்தோசத்தில் இருக்கிறேன்.

எனக்கு ஒரு கவலைதான், நான் பிறக்கும் போது பார்வையற்றவனாய் பிறந்துவிட்டேன். என் தாய் தந்தையால் எனக்கு பார்வை கொடுக்க முடியவில்லை, ஆனால் எனது கனவான இசைக்கும் பார்வையில்லாமலே போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு அண்ணன் இமான் பார்வைகொடுத்துள்ளார். அன்பு அண்ணன் இமான் அவர்களுக்கு நான் என்ன சொல்லுவது என்றே தெறியவில்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பார்வையற்ற பாடகிக்கு இசையமைப்பாளர் தமன் கொடுத்த வாக்குறுதி

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

Music composer Thaman promise to the singer

 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த சீசனில் இரு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதிளியத்த  இசையமைப்பாளர் தமன், கானா பாடலைப் பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஒளிபரப்பான ஒரு எபிஸோடில், நீலகிரியைச் சேர்ந்த புரோகிதஶ்ரீ எனும் பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அழகான குரலால் பாடி அனைவரையும் அசர வைத்தார்.

Music composer Thaman promise to the singer

 

கண் பார்வையில்லையென்றாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்த சிறுமியின் தைரியம், இசைத்திறமை அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன், சிறுமி புரோகித ஶ்ரீயின் கதையைக் கேட்டு உருக்கமாகி கண்ணீர் சிந்தினார். மேலும் புரோகித ஶ்ரீக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று உறுதியளித்தார். அவரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இதே நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலைக் கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசிர்வாதத்தை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள் ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில் அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு பெரும் மாற்றத்தை, வாய்ப்பை வழங்கும் இசையமைப்பாளர் தமனின் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

 

 

Next Story

"ஒரு நல்ல திரைப்படம் சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்" - டி. இமான்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

imman about kazhuvethi Moorkan

 

அருள்நிதி நடிப்பில் ‘ராட்சசி’ பட இயக்குநர் சை. கௌதமராஜ் இயக்கத்தில் ஜெயந்தி அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்த படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகி இருந்த இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். கடந்த மே 26 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

 

இப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, "கழுவேத்தி மூர்க்கன், 'பிறப்பொக்கும்' என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியைப் பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜுக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்" என ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். 

 

இப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் டி. இமான் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "50 நாட்களாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கழுவேத்தி மூர்க்கனைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

 

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாகக் கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையைச் செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்; அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்... கழுவேத்தி மூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.