
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமகதரப்பு‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் த.செ. ஞானவேல் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடிகர் சூர்யா இதில் நடித்தார்.காலண்டர்படம் மாற்றப்பட்ட பிறகும்இதில் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என நம்பினேன். குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்தகாலண்டரைகாட்டுவது எங்களின் நோக்கம் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வரும் அந்தகாலண்டர்சூட்டிங்கின்போதுஎங்கள் கவனத்தில் பதியவில்லை.ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிஷ்டவசமானது. இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது. தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. இதன்பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)