Advertisment

' பயமா... எனக்கா...'- கைதுக்கு பின் வீடியோ வெளியிட்ட கஸ்தூரி

'I'm afraid... I'm afraid...' - Kasthuri released the video after the arrest

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

Advertisment

எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டதோடு செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியானது. இத்தகைய சூழலில் தான் நடிகை கஸ்தூரியை நேற்று (16.11.2024) ஹைதராபாத்தில் வைத்து சென்னை போலீசார் கைது செய்திருந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் இருந்து காவல்துறையினர் இன்று (17.11.2024) சென்னை அழைத்து வந்தனர். இதனையடுத்து அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிரித்தப்படியே காவல் நிலையத்திற்குள் சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை கஸ்தூரியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில், நீதிபதி ரகுபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் அவரை வேனில் ஏற்ற முற்பட்டபோது, “அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” என நீதிமன்றத்தில் கோஷமிட்டார். இதனால் சிறிதுநேரம் அங்குப் பரபரப்பாகக் காணப்பட்டது.

இந்நிலையில் கைதுக்கு பிறகு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதில் அவர் பேசுகையில், ''என்னை கஸ்டடியில் எக்மோர் போலீஸ் ஸ்டேஷனில் எடுத்திருக்கிறார்கள். நான் தலைமறைவாக இருந்தேன் என்று வெளியான தகவலுக்கு நான் மறுப்பு தெரிவித்துக் கொள்கிறேன். நான் எங்கும் போகவில்லை. நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்தேன்நான் தலைமறைவாகவில்லை. நான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை. ஹைதராபாத்தில் வீட்டிலிருந்து படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகுதான் நானே கோஆப்ரேட் பண்ணி தான் போலீசார் என்னை அழைத்து வந்தார்கள். இதுவரை பத்திரிகைகளில் வந்த செய்திகளை நான் பார்க்கவில்லை. எனக்கு அமைதியான சூழ்நிலை தேவைப்பட்டால் என்னுடைய செல்போனை என்னுடைய வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு நான் போய் விட்டேன். இன்று நான் பார்த்தேன் ஆனால் நான் தலைமறைவானதாக வெளியான தகவல் எதுவுமே உண்மை கிடையாது. பயமா... எனக்கு அது கிடையாது'' என பேசியுள்ளார்.

Chennai kasthuri police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe