Advertisment

''வெளியேறுகிறேன்... பயத்தால் அல்ல''- வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு

nn

Advertisment

எக்ஸ் கணக்கில் இருந்து வெளியேறுவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குறித்து பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அதேநேரம் சமூக வலைத்தள பக்கங்களில் சிலர் தன்னையும் மற்றும் எனது குடும்பத்தினரையும் விமர்சித்து வருவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். புகாரும் அளித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்ததாகக்கூறப்படுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமான் சார்பில் விளக்க நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், 'உங்கள் குடும்பத்தினரை விமர்சிப்பதை புகாராக சொல்கிறீர்களே. என்னையும், என் குடும்பத்தையும், என்னை சார்ந்தவர்கள் குடும்பத்தையும், மனைவி, தாய், குழந்தைகள் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்களே அதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன' என கேள்வி எழுப்பி இருந்தார்.

Advertisment

seeman

இந்நிலையில் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தான் தற்காலிகமாக வெளியேறுவதாக அருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள எட்டு பக்க விளக்கத்தில், 'சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக என் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் அவமதிக்கின்றனர். என் குழந்தைகள், குடும்பத்தினர் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் க்ரைமில் மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பயத்தினாலோ அருவருப்பினாலோ இந்த முடிவை எடுக்கவில்லை. தற்காலிகமாக நானும் எனது மனைவியும் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து விலகுகிறோம். போலி கணக்குகளில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வக்கிர புத்தி கொண்டவர்கள் தான் அவமானப்பட வேண்டும். ஆன்லைன் அப்யூஸ் என்பது இரும்பு கரங்களால் ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். எவ்வித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' எனவருண்குமார் தெரிவித்துள்ளார்.

seeman police ips trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe