Advertisment

'நான் கால் ஊன்றிக் கொண்டுதான் இருக்கேன்'-நயினார் நாகேந்திரன் பேட்டி

bjp

எந்த ஜி வந்தாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என தமிழக முதல்வர் பாஜகவை விமர்சித்துள்ள நிலையில் முதல்வரின் விமர்சனத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

Advertisment

சேலத்தில் காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் 'எந்த ஜி வந்தாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என தமிழக முதல்வர்' பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நான் கால் ஊன்றிக் கொண்டுதான் இருக்கிறேன் பாருங்கள். நான் நடந்து கொண்டுதான் இருக்கிறேன்'' என்றார்.

Advertisment

'பாமக உருவானதால் தான் தமிழகத்தில் சாதி கலவரம் அதிகமாக உருவானது' என திமுகவின் அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன? சாதி சண்டைகளுக்கு பாமக தான் காரணமா? என கேள்வி செய்தியாளர்கள்எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ''நான் எப்படி அதை சொல்ல முடியும்'' என தெரிவித்து கையில் இருந்த சால்வையை செய்தியாளர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

nayinar nagendran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe