/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Ramadoss in_68.jpg)
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் விரைவில் நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்திவருகின்றனர். இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)