விருத்தாசலத்தில் கள்ள மதுபாட்டில்கள், செல்போன் திருடியவர்கள் கைது!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் பாலக்கரையில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்று வருவதாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது மாரிமுத்து மதுவிற்பனை செய்தது தெரிந்தது.

police

147 குவார்ட்டர் பாட்டில் மற்றும் 6 பீர் பாட்டிலுடன் இருந்த மாரிமுத்தை விருத்தாசலம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

police

இதேபோல் விருத்தாசலம் எல்.ஜ.சி கட்டிடத்தின் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கும் பின் முரணான பதிலை கூறியுள்ளார். பின்னர் தீவிர விசாரனையில் ஈடுப்பட்ட போது, அவர் சின்ன கொசப்பள்ளத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பதும், விருத்தாசலத்தில் பிரபல செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் பல்லாயிரம் மதிப்புள்ள 15 செல்போன்கள் திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து, அவர் திருடிய செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

arrest police
இதையும் படியுங்கள்
Subscribe