illicit liquor case accused flees from police station

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் பகுதியில் சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.