புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdf.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனை முன்பாக சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், நோயாளிகளும், உடன் வரும் உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாவதாக உழவர்கரை நகராட்சிக்கு புகார் வந்தது. அதையடுத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற நகராட்சி சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் பொக்லைன் இயந்திர மூலம் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க கண்காணிப்பு அவசியம் என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)