
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், எஸ்.பி ஜவஹர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு டவுன் மதுவிலக்கு எஸ்.ஐ பிரகாஷ் தலைமையிலான போலீசார், அசோகபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த நபர் 46 புதூரைச் சேர்ந்த சசிகுமார் (49) என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, நரிப்பள்ளம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் மது விற்பனை செய்து வந்த அசோகபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், குமார் (47) ஆகியோரை கைது செய்த சித்தோடு போலீசார், அவர்களிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.