Advertisment

சட்டவிரோத மது விற்பனை; ஒரே நாளில் 47 பேர் கைது

Illegal liquor sale; 47 people arrested

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 322 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் இது போன்ற தேடுதல் வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment
police liquor Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe