கோவையில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கட்டிபுதூரில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டப் பகுதியில் கொடுங்கரை பள்ளம் எனும் இடத்தில் சேவல் சண்டை சூதாட்டமானது நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 15 பேரை கைது செய்தனர். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 18 சேவல்கள், 11 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் 36,750 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.