Advertisment

அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில்... 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு! 

Advertisment

Illegal buisness in the name of beauty salon - Police on search 3 people

கடலூர் செம்மண்டலம் சேர்மன் சுந்தரம் நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக கடலூர் புதுநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்ளிட்ட போலீசார் நேற்று (01.09.2021) அந்த அழகு நிலையத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த அழகு நிலையத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அரைகுறை ஆடைகளுடன் இருந்தனர்.

Advertisment

பக்கத்து அறையை சோதனை செய்தபோது, அங்கு இரண்டு பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த 26 வயது என்ஜினியர் என்றும்,அவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.தொடர்ந்து விசாரித்தபோது வண்ணாரபாளையம் பாண்டியன் மனைவி புவனேஸ்வரி, குமார் மகன் மணிமாறன், திருப்பாதிரிப்புலியூர் ராஜ் (எ) ராஜ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

இதில் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சிதம்பரம் வல்லம்படுகை பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஆகிய 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. அதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாலியலில் ஈடுபட்ட இன்ஜினியரை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களைப் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், அழகு நிலையம் நடத்திவந்த புவனேஸ்வரி, மணிமாறன், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர். அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திவந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore illegal activities
இதையும் படியுங்கள்
Subscribe